Category: இலங்கை செய்திகள்
-
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நுவரெலியா – பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையாகாத நிலையில் குறித்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான்…
-
பலா பழத்தால் வந்த விபரீதம் அடித்து கொல்லப்பட்ட வயோதிப பெண்! இளைஞன் கைது
குருநாகல் மெல்சிறிபுர பகுதியில் 79 வயதுடைய பெண்ணின் தலையில் பலா பழத்தால் தாக்கி கொலை செய்த 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மெல்சிறிபுர வடவன கிராமத்தில் வசித்து வந்த 79 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருகிறது கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும்…
-
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல்
அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கடந்த ஜூலை 8 ஆம் திகதி அத்துருகிரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் 7 பேரை கைது செய்து…
-
யாழ் இளைஞர் – யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி
யாழ்பாணத்தில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது டயட் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் ஆறு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது தகவல். குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணினால் கோடிக்கணக்கான பணம், பல்கலைக்கழக…
-
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில்
சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற…
-
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
நாட்டிலுள்ள பலதரப்பட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமாக சிரத்தை எடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு நோயாளரை நாம் வைத்தியரிடம் அழைத்து செல்லும் போது கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியரை நாம் நம்புவது வழக்கம். அவ்வாறான வைத்தியர்கள் நோயாளர்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதா அல்லது சேவை செய்வதா என்பது அவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயமமாக இருக்கிறது இந்தவகையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அந்த…
-
புலம்பெயர் தமிழர்களுக்கு வைத்தியர் அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்!!
இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காலத்திற்கு ஏற்ப புதிய இளைய அரசியல்வாதியை உருவாக்குவோம். அப்படி ஒருவரை தேடிப்பிடித்தோமெனில், அவரது சொத்து விபரங்கள், வங்கி விபரங்கள் உள்ளிட்டவை அவரது பின்புலம் போன்றவற்றை தெளிவாக…
-
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புலம்பெயர் மக்களிடமிருந்து சேகரித்த நிதிக்கு என்ன நடந்தது : அகிலன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்காக மட்டும் உலக மக்களிடம் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தால் சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என கனடா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் அகிலன் முத்துக்குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சாவகச்சேரியில் நேற்று(18/07/2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார். மேலும் தெரிவிக்கையில், சத்திர சிகிச்சை திட்டத்தை கூட ஏன் சரியாக நடத்த முடியவில்லை. ஆளணிப் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு எதற்கு உபகரணங்களை வழங்கினீர்கள். கறள்…
-
வைத்தியர் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன! யாராலும் இயக்கப்படுகின்றாரா?
வைத்தியர் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன! யாராலும் இயக்கப்படுகின்றாரா? தமிழ் மக்களினுடைய உரிமைகளை கபளீகரம் செய்து அவர்களை ஒடுக்கும் நகர்வுகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவு எவ்வாறு எதிரொலிக்கும் என்பதற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் முன்மாதிரி தமது நீண்டநாள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படாமைக்கு குரல்கொடுக்க எழுந்த மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே இதற்கு ஒரு அடித்தளமிட்ட நபராக சாவகச்சேரி வைத்தியசாலையின்…
-
வைத்தியர் அர்ச்சுனா!! இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
இனி யாழ்ப்பாணம் திரும்பி வரமாட்டேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா. இனிமேல் யாழ்ப்பாணம் வரக்கூடாது என்று நிறைத்து யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய இரண்டாவது சந்தர்ப்பம் இது என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக தான் வெளியேறியிருந்ததாகவும் அவர் சுட்டிக் காண்பித்துள்ளார். குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை ‘பொறுக்கிகள்’ என்று சாடியிருந்த வைத்தியர் அர்ச்சுனா, அடுத்த தேர்தலில் உண்மையுள்ள படித்த…