Category: இலங்கை செய்திகள்
-
நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா
ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது. நான் சிறுவயதாக…
-
கழிவுப் பொருட்களுக்கு தீ வை வைப்பு :வீதியால் செல்லும் மக்கள் அவதி
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும் அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததன் மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாநகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிய போதும் அவர்கள்…
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்
பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும்,…
-
இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனுக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள்…
-
இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குபிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின்…
-
யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகள் மீண்டும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண…
-
சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
புத்தளம் (Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக…
-
மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி
அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். நாட்டில் தற்போது மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்…
-
யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(14) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை யாழ்ப்பாணம் பொலிஸ்…
-
மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்- எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். இது மக்கள் ஆணைக்கு இழைக்கப்படும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.…