Category: முக்கிய செய்தி

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும்,…

  • யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம்

    தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் பழிவாங்க முயற்சிக்கும் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம்…

  • அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு

    எதிர்வரும் வாரம் இரண்டு பேர் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளதாகவும், தற்போது கைதுகள் தொடர்பில் அரசாங்கமே தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார் டி. வி.சானக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், தேசிய மக்கள் சக்தி தரப்பில் இருந்த இரண்டு பேர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொலிஸில் பணியாற்றும்போது, ​​நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவின் நலனை விசாரிக்க சி.ஐ.டி வளாகத்திற்குச் சென்றபோது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு…

  • யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர்

    யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில்…

  • அர்ச்சுனாவைப் பார்த்து அஞ்சுகிறதா அநுர அரசு! மறுத்துப் பேச ஏன் தாமதம்

    அர்ச்சுனாவைப் பார்த்து அஞ்சுகிறதா அநுர அரசு! மறுத்துப் பேச ஏன் தாமதம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சரியானதா பிழையானதா என தெரியவில்லை ஆனால் தைரியமாக முன்வந்து பேசுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவரது கேள்விக்கு முதலில் பதில் வழங்க முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள் என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களில்…

  • பல உலக நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய டிரம்ப்

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிலையில் பல உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்தியுள்ளார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு…

  • இலங்கையில் தீவிரமடையும் வானிலை! ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

    நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. நேற்றைய (25) நிலவரப்படி, சில மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து…

  • பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் – சிக்கப் போகும் பல முக்கிய பிரபலங்கள்

    தென்னிலங்கையில் அடுத்து வரும் நாட்கள் மிகுந்த பரபரப்பானதாக இருக்கும் என அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கங்களின் ஆட்சியின் போது நடந்த மோசடி, ஊழல், கொலை மற்றும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பாக 11 வழக்குகளை தாக்கல் செய்யத் தேவையான கோப்புகளை இலங்கை பொலிஸார், சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளனர். இந்த வழக்குகளில் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கோப்புகளிலிருந்து முழு…

  • கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டடம் ஒன்றிற்குள் இருந்து விரல்களைக் கொண்டு அமைதிச் சின்னத்தைக் காண்பிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த சந்திப்பிலோ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ…