Category: இந்திய செய்திகள்

  • முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை.. கங்கனா ரனாவத் கேட்ட கேள்வி?

    பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை கீழே இறக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் பேசிய விஜய், பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார். இந்தச்சூழலில் தான்,…

  • தமிழக முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுகள்…

  • போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைய நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சங்க நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக…

  • “துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை – முதல்வர் விஜய்

    எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய்ய தமக்கு விருப்பமில்லை என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய அவர், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இளம் வயதினர் குற்றங்களில்…

  • டெல்லி விடுதி இடிந்தது ‘இதனால்தான்!’ தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி!

    டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த 5 மாடிக் கட்டடம், நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிய நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்பதைக்…

  • சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு

    தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டர்ம்பர் 3) நடைபெற்ற சட்டப்பேரவையின் போது பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கள் கிழமை பதிலளிக்கப்போவதாகவும், யாரும் எழுந்து வெளியில் போகக்கூடாது எனவும் பேசியிருந்தார். முதல்வரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப்…

  • இணையத்தில் வைரலான இளைஞர் ஒருவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியில் அமைந்திருக்கிறது அஜ்னர் ஆறு. குப்பைகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் நிரம்பி வழிந்துக் கிடக்கும் இந்த ஆறு, அழியும் தருவாயில் இருந்தது. ஆனால், அந்த ஆற்றுக்கு ஒரு 20 வயதான இளைஞர் தான், மீண்டும் புத்துயிர் கொடுத்து காப்பாற்றினார். அதாவது, பிட்டு டாபி என்ற அழைக்கப்படும் B.Sc பட்டம் படித்த இளைஞர் ஒருவர், அஜ்னர் ஆற்றங்கரையோரமாக இருந்த குப்பைகளை, தனது சொந்த முயற்சியின் மூலம் நீக்கியிருந்தார். ஆரம்பத்தில் நண்பர்களுடன்…

  • வங்கதேசத்தில் தீவிரமடையும் தட்டம்மை நோய்

    வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை தட்டம்மை மற்றும் அது தொடர்பான நோய் அறிகுறிகளால் 991 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக டாக்கா பிரிவில் மட்டும் 464 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், சுமார் 19 ஆயிரத்து 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

  • தமிழக முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அஜித்-விஜய் ஆகிய இருவரை நிச்சயமாக சொல்ல முடியும். இவா்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லப்படுகிறது. தற்போது, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியுள்ள விஜய், அரசியலில் நுழைந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இப்படியான சூழலில், முதலமைச்சர் விஜயின் புதிய நடவடிக்கை ஒன்றை, நடிகர் அஜித்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில்…

  • சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 300 பேர்

    கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று தனது கடின தன்மையை இழந்து உடைந்தது. தொடர்ந்து அந்த நீர் நிலச்சரிவால் ஒரே இடத்தில் தேங்கி பின்னர் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியேறியது. இதன் காரணமாக சுனாமி வேகத்தில் வந்த வெள்ள நீர், போதேகோஷி (Bhote Koshi) மற்றும் திரிசூலி ஆற்றின் வழியாக நேபாளத்துக்குள் பாய்ந்தது. பல மீட்டர் தூரம் உயரத்துக்கு வந்த இந்தப் பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தில் பெரும்…