Author: Yalarasan
-
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17…
-
ஆயுதப்படையினருக்கு விசேட உத்தரவிட்ட ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இந்த விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதற்கமைய இன்று நாடாளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
19 பேருடன் பயணித்த விமானம்நேபாளத்தில் விபத்து; பயணிகள் என்ன நிலை?
நேபாளத்தில் 19 பேருன் பயணித்த சவுரியா ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தில் 19 பேருடன் பயணித்த விமானம் விபத்து; பயணிகள் நிலை என்ன? நேபாளத்தில் 19 பேருன் பயணித்த சவுரியா ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தில் 19 பேருடன் பயணித்த விமானம் விபத்து; பயணிகள் நிலை என்ன? | Plane Crashes In Nepal With 19 On Board…
-
பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்பு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவுகளை அறிவித்துள்ளது. இந்த…
-
மொட்டுவின் 12 மாவட்ட தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவு!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை…
-
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படை நிதியளித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை. 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் இரண்டையும் போராட்டக்காரர்கள்…
-
சம்பள முறைப்பாடுகளுக்கான முன்மொழிவுகள் அழைப்பு!
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது. சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எவ்வாறாயினும், அனைத்து முன்மொழிவுகளின் மென் பிரதியொன்றை மட்டுமே PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…
-
இன்று மீண்டும் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்
நாடாளுமன்ற அமர்வானது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இன்று (23) முதல் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தின் கீழான இரண்டு உத்தரவுகள் மீதான விவாதம் இன்று (23.07.2024) இடம்பெறவுள்ளது. மேலும், சபை ஒத்தி வைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது. அதேவேளை, ‘தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள்…
-
சீனாவில் பிரபல பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரை மாய்த்துள்ளார்
சீனாவை சேர்ந்த பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங் என்ற 24 வயதான இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூடியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதனால் அவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார். ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம்…
-
சடலத்தால் அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி…