Author: yalarasan canada

  • சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

    சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

    கனடாவில் (Canada) கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு (International Students) கோவிட் காலகட்டத்தில் அகற்றப்பட்ட கட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி புரிவதற்காக மாறிவிடுகிறது என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.

  • 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகநபர் கைது!

    14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகநபர் கைது!

    காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 28 வயதுடைய ஆண் என்பதுடன் எதிர்வரும் 14 ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(30) உத்தரவிட்டுள்ளார். இதில் கைது செய்யப்பட்டவர் திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும் இவர் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில்…

  • கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகம்!

    பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகம்!

    நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீல் முததிரையை உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து, கட்டிடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுவந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் இருந்த முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் காணாமல் ​போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை சுதந்திரக்…

  • ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

    ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

    ஜப்பானின் (Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa) மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

  • சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு!

    சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு!

    இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், துரைராசசிங்கம் பதவி விலகியதால் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமானது. யாப்பின் படி வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கமைய சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் இருக்கிறார். ஆனால் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பதில் பொதுச்செயலாளர் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன.

  • வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதான இளைஞனை அழைத்து செல்லும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.அதற்கமைய இரண்டு பெண்கள் உட்பட குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

  • யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள்!

    யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள்!

    யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் (29.04.2024) இன்றாகும். ஏ – 9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டில் இளைஞர்கள் வெள்ளை வானில் ஒட்டுக்குழுக்களாலும், அரச படைகளாலும் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதுமான 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே, அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்த ஸ்ரான்லி வீதியும், இராசாவின் தோட்டப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் வைத்து ரஜீவர்மன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுவிட்டு…

  • நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் நாளை (30.04.2024) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின் கடல் உணவு தொழிற்சாலைக்கு இவர்கள் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என…