Author: yalarasan canada
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் பொதியில் மர்மம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் UL 127 விமானத்தின் ஊடாக சென்னை செல்ல முற்பட்ட நபரே இவ்வாறு சிக்கியுள்ளார். குறித்த பயணியின் பயணப் பொதியில் இருந்து 482.02 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான மாணிக்கக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
-

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கூட கிடையாது. அது கம்பனிகளுக்கே உண்டு என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், கடந்த காலங்களில் எங்களை அவமானப்படுத்தினார்கள். இன்று லயத்திற்கு 10 பட்டதாரிகள் இருக்கின்றார்கள். இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல. மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் இவர்.
-

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்களுக்கு அரசாங்கம் 26.6 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசியை வழங்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போஷாக்கு நிலையை உயர்த்துவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று…
-

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
-

யாழில் தனியார் பேருந்தை மறித்து மிரட்டல்!
காரைநகர் – யாழ்ப்பாணம்(Jaffna) இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை வலந்தலை சந்தியில் மறித்து கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம்(03.05.2024) இடம்பெற்றுள்ளது. அத்துடன் தனிநபர் ஒருவரும் பேருந்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
-

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது. அதுவரை நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்பது எனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரித் திட்டங்களைப் பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என நம்பகரமான…
-

கனடாவிலிருந்து அதிகமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோர் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
கனேடிய குடியுரிமை பெற்றும் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 2017ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு அமெரிக்கா, ஹொங்ஹொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளார்கள்.
-

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய பீ.மதனராஜ் என்பவரே சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன் , மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை முன்னெடுத்தனர்.
-

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!
2019 ஆம் ஆண்டு நாட்டை பதற்றத்துக்கு இட்டுச்சென்ற உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் (03.05.2024) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சுமார் ஐந்து மணிநேரம் அவர் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
-

யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது!
யாழ்.வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று (02.05.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட (சுருக்குவலை) வலையை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமையினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.