Author: Six Side Media
-

வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக்…
-

கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்
கண்டி, கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கம்பளை வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று(28) மாலை குறித்த தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடிய நிலையில் குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-

ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு
பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவுதான் ரயில் விபத்திற்குக் காரணம் என்று ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பிபெராச் நகரில் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர் முதற்கட்ட விசாரணையில், ரயில் தடம் புரண்டு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்து மண்மேட்டில் மோதியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிறுவன ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்,…
-

சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 6.6 அதிர்வலை பதியப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் இதுவரை எச்சரிக்கைகள் ஏதும் விடப்படவில்லை.
-

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று(28)காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு…
-

தென் அதிவேக வீதியில் கோர விபத்து: இரண்டு பெண்கள் பலி
தென் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) பிற்பகல் நடந்த வாகன விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தளயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானின் டயர், அங்குணகொலபெலஸ்ஸ பகுதியின்; 175வது கிலோமீட்டர் தூண் பகுதியில் வைத்து வெடித்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனையடுத்து வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த சிற்றூர்தியில் ஆறு பேர் இருந்ததுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க…
-

பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசமான செயல்.. சிக்கிய கோடீஸ்வர வர்த்தகரின் மகன்
பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விடுமுறையில் நாடு திரும்பியவர், மற்றவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என தெரிய வந்துள்ளது. இருவராலும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில், 5 நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கிட்டத்தட்ட 15 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைக்கு…
-

சர்ச்சைக்குள்ளான ரணிலின் தீர்மானத்தை வரவேற்கும் அரசியல்வாதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் சரியான தீர்மானமாகும். அரசியல்வாதியென்ற வகையில் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அன்றைய காலகட்டத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்திருந்தது. நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் விநியோகம் முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் அத்தியாவசிய…
-

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு அனுப்பப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த போலி மின்னஞ்சல்கள் judicial.gov-srilanka@execs.com polcermp@gmail.com andrep.atricia885@gmail.com ecowastaxs@gmail.com ccybermp@gmail.com vinicarvalh08@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அத்தகைய மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் இலங்கை பொலிஸ் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் அனுப்பும் செய்திகள்…
-

இளைஞர்களுக்கு பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை முறையாக ஒழுங்குபடுத்த மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தவறியமையே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கமைய, பொருட்களில் அதிகபட்ச பாதரச அளவு ஒரு மில்லியனுக்கு ஒரு பங்கு என்றாலும், சந்தையில்…