Author: Six Side Media

  • பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் பிரதமர்

    பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் பிரதமர்

    பிரான்ஸ் நாட்டின் பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னரே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 364 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 194 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பிரதமர் பிரான்சுவா பேரூ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரான்சுவா பேரூ, இரண்டு…

  • வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா பயணம்

    வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா பயணம்

    ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று(07) காலை ஜெனீவாவுக்கு விமானம் மூலம் பயணமாகின்றார். அமைச்சருடன் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸும் செல்கின்றார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில், மதியம் ஒரு மணியளவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுவார் என்றும் தெரிய வந்துள்ளது.

  • எல்ல பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

    எல்ல பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

    எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரின் இரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, குறித்த இரத்த மாதிரிகள் இன்றையதினம்(07.09.2025) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட உள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பதை கண்டுபிடிப்பதற்காகவே இந்த இரத்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இராவண எல்ல வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும்…

  • எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!

    எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!

    ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல – வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின்…

  • இயக்கச்சியில் களைகட்டிய பாரம்பரிய உணவுத் திருவிழா – அலைமோதிய மக்கள்

    கிளிநொச்சி- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா இன்றும்(07.09.2025) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த உணவுத் திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இந்த மாபெரும் உணவு திருவிழா நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இன்றுவரை இந்த உணவுத் திருவிழா, சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.…

  • வரலாற்றில் முதன்முறையாக கச்சதீவில் கால் பதித்த இலங்கையின் ஜனாதிபதி

    வரலாற்றில் முதன்முறையாக கச்சதீவில் கால் பதித்த இலங்கையின் ஜனாதிபதி

    யாழ்ப்பாணத்துக்கு இன்று (01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து கடற்படையினரின் 4 படகுகளில் கச்சதீவுக்கும் பயணமானார். கச்சதீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாலை 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதேவேளை, தமிழகத்தில் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் அண்மையில் கச்சதீவை மீளப் பெறவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய…

  • வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்: யாழ். வந்த ஜனாதிபதி  உறுதி

    வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்: யாழ். வந்த ஜனாதிபதி உறுதி

    வடக்கில் கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ். மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் இன்றைய (01.09.2025) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கடற்றொழில் சமூகத்துக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், வடக்கில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு…

  • அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்!

    அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்!

    எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம்…

  • பிரித்தானியாவில்  மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! பொலிஸார் விசாரணை

    பிரித்தானியாவில் மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! பொலிஸார் விசாரணை

    பிரித்தானியாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 வயதான லோகன் கார்ட்டர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் பலத்த காயங்களுடன் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன்…

  • கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து

    கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து

    அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக  இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில், டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்க சட்டப்படி, பதவி விலகிய துணை ஜனாதிபதிக்கு ஆறு மாதங்கள் வரை…