Author: Six Side Media

  • ஹம்பாந்தோட்டையில் அதிகூடிய உப்பு விளைச்சல்

    ஹம்பாந்தோட்டையில் அதிகூடிய உப்பு விளைச்சல்

    ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இலங்கை உப்புக் கூட்டுத்தாபனத்தின் உப்பளத்தில் இம்முறை அதிகூடிய உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளது. தற்போதைய பெரும்போக உப்பு விளைச்சலின்போது சுமார் நாற்பதினாயிரம் தொன் உப்பு ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் விளைவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் இன்னும் சில ஆயிரம் தொன்கள் உப்பு விளைச்சலைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தளம் உப்பளத்திலும் சிறந்த உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளதாக உப்புக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான உப்பு இம்முறை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்பட்டுள்ளதுடன்,…

  • நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    நடிகர் விஜய் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் கடிதம் தமிழ்நாடு பொலிஸ் தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்குத் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு, உடனடியாக நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கரூரில் நேற்றையதினம்(27) நடந்த தமிழக வெற்றிக்…

  • யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

    யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

    யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணம்…

  • விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பதற்றம் – 31 பேர் பலியென தகவல்

    தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று முன்னெடுத்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையை மேற்கொள் காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதில் 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தீவிர…

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை

    அமெரிக்க நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையின் 79வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செப்டம்பர் 24 புதன்கிழமை உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் திசாநாயக்க பேச உள்ளார். அரச தலைவராக தனது முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உரையில், அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி…

  • புதைகுழிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை

    புதைகுழிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை

    மனித புதைகுழிகள் உட்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகவே இருப்பதாக இலங்கை மீண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூறியபடி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் இந்த தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை தயாராகவே உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மனித புதைகுழிகளை அகழும் விடயத்துடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் கட்டளைகளுக்கு இணங்க இந்த உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர்…

  • போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

    போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

    போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துவோரை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையின்படி, போதைப்பொருளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவோரை சோதனையிடுவதற்கும், வழக்குத் தொடருவதற்கும் பொலிஸார் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியும் 2025 செப்டம்பர் 4ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், வாகனத்தை செலுத்தும் ஒருவரின் இயல்பற்ற நடத்தை, உடலசைவில் மாற்றங்கள், அசாதாரண கண் பார்வை நிலை அல்லது அவரின் ஆடை உட்பட்ட விடயங்களை மையப்படுத்தி, போதைப்பொருள் உட்கொண்டதாக “நியாயமான…

  • தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள இலங்கை மின்சார சபை பணியாளர்கள்

    தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள இலங்கை மின்சார சபை பணியாளர்கள்

    இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் உட்பட பல இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், இன்று(21) நள்ளிரவு முதல், முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புக்கு எதிரான தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளன. கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதியன்று ‘விதிப்படி வேலை’ பிரசாரத்துடன் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டமும் நடத்தப்பட்டது. கடந்த 17 நாட்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும் பிரச்சினைக்கு தீர்வு…

  • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.. பிரபு எம்பி தெரிவிப்பு

    தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.. பிரபு எம்பி தெரிவிப்பு

    தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வு வெகு விரைவில் எட்டப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற இருக்கும் வீதி அபிவிருத்தி தொடர்பாக நேற்று (19) நேரில் சென்று வீதிகளை பார்வையிடும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர், “தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் மிகவும் நேர்த்தியாகவும் நீதியான முறையில் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும்…

  • முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாதென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த எல்லைக்கிராம மக்களின் அழைப்பை ஏற்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின்…