கண்டியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழப்பு.

கண்டி – பன்வில, நக்ள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

13 மற்றும் 14 வயதான இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 02 மாணவர்களும், கற்பாறையிலிருந்து நிழற்படம் எடுக்க முயற்சித்த போதே, கீழே வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், மற்ற மாணவன் கண்டி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய, உயிரிழந்த மாணவர்களின் உடலங்கள், மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 05 நண்பர்கள் இன்று மாலை பன்வில, நக்ள்ஸ் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போதே, குறித்த 02 மாணவர்களும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *