கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!

கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார்.

திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு பதவி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த சில மாதங்களில் ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்திற்கான திட்டங்களை பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ கொண்டுள்ளது ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *