கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது

சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்திருந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Kattunayakke) கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று (30.06.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைதானவர் 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது