மொஜ்தபா கொமெய்னி நலமாக இருக்கிறார்! ஈரான் அறிவிப்பு

ஈரானின் உயர்மட்டத் தலைவரான மொஜ்தபா கொமெய்னி நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், தலைமைப் பொறுப்புகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ஈரான் மீண்டும் அறிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய உச்சத் தலைவரின் பிரதிநிதி அப்துல்லா ஹாஜி சாதேகி இதனை தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை காரணமாக மொஜ்தபா கொமெய்னி பொதுவெளியில் தோன்றாத போதிலும், அவர் தனது தலைமைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் மீது எதிரிகள் மீண்டும் ஏதேனும் தாக்குதலை முன்னெடுத்தால், இதுவரை இல்லாத அளவிலான கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டு,அவர் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தியது.

மொஜ்தபா கொமெய்னியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்தே ஈரானின் ஊடகங்கள் இவ்வாறு வெளியிட்டுள்ளன.