‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ – ட்ரம்ப் மறுப்பு

வாஷிங்டன் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், எப்படியாவது ஒரு முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ட்ரம்ப், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எப்படியாவது ஒரு முடிவு விரைவில் வரப்போகிறது என்று கூறினார்.

பெரும்பாலானவர்கள் இது தேர்தலுக்குப் பிறகுதான் நடக்கும் என்று நினைக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவால் ஈரானுடனான போரை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும், ஆனால் அந்த முடிவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஈரானை இராணுவ ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடித்துவிட்டதாகக் கூறிய அவர், தெஹ்ரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *