சவூதி அரேபியா என்றாலே இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா, எண்ணெய் வளம், வளைகுடா நாடுகள் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சவூதி அரேபியாவைச் சுற்றி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், “சவூதி அரேபியாவுக்காக… எந்த எல்லைக்கும் செல்வோம்!” என பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவுக்கும், யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்புக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களில் சவூதியை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவையும் ஹவுதிகள் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாகவும், அதனை சவூதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மக்கா அல்லது வேறு எந்த இஸ்லாமியப் புனிதத் தலத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் தகவல்களை ஹவுதிகள் மறுத்துள்ளனர். இந்நிலையில், ஹவுதிகளுக்கு எதிரான போரில் உதவுமாறு சவூதி அரேபியா கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மெக்கா ஒப்பந்தத்தில் இணைந்துள்ள துருக்கியும், பாகிஸ்தானும் உதவ முன்வரவில்லை என்றும், அமெரிக்காவும் இந்தப் போரில் நேரடியாக ஈடுபடாமல் விலகி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
Leave a Reply