மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் புகைமூட்டமும் வெப்பமும் நீடிக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள ஓராங்குத்தான்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புகைமூட்டமும் கடும் வெப்பமும் ஓராங்குத்தான்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அதிகாரிகள் ஆராய்கின்றனர்.
600 ஹெக்டர் பரப்பைக் கொண்ட செமாங்கோ வனவிலங்கு பூங்காவில் (Semenggoh Wildlife Centre) 29 ஓராங்குத்தான்கள் உள்ளன.
அவை 3 முதல் 55 வயது வரையுள்ள ஓராங்குத்தான்கள்.
இதுவரை ஓராங்குத்தான்களின் உடல்நலத்தில் பாதிப்புகள் இல்லை.
அடர்ந்த மரங்களின் மேல்பகுதி வெப்பத்தையும் புகைமூட்டத்தையும் ஓரளவுக் குறைப்பதால், ஓராங்குத்தான்களுக்கு அது வசதியாக இருக்கிறது.
Leave a Reply