ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம்

ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் திறப்பு விழா, காணொளி கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த 1 கி.மீ. நீளமுள்ள இருவழிச் வீதிப் பாலம், வடகொரியாவின் ராசான் நகரையும், ரஷ்யாவின் காசான் நகரையும் நேரடியாக இணைக்கிறது.

இதன் மூலம் தினசரி 300 வாகனங்கள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க முடியும் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1946-ம் ஆண்டு வடகொரியாவின் நிறுவனரான கிம் இல் சுங்கை (தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் வுன்னின் தாத்தா) படுகொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவரே சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் ஆவார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *