கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!

உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு ஆதரவளிப்பதில்லை என்று பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

அவருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பிலிப் தியாலோ (Philippe Diallo) அறிவித்துள்ளார்.

ஃபிஃபா தலைவரின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை உடைந்துவிட்டதாகவும் உலகக் கால்பந்தை நிர்வகிக்கும் விதம் தற்போதுள்ள முறையுடன் ஒத்துப்போகவில்லை என்றும் பிரான்ஸின் கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகக் குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, உலக கிண்ணம் உட்பட்ட ஃபிஃபா தொடர்களிள் 20 சதவீத பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் இன்ஃபான்டினோவின் திட்டமே இந்த முடிவுக்கான காரணம் என்று பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *