சீனாவின் புஜியானில் கனமழை – பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

சீனாவின் புஜியான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் நேற்று (02) பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையைத் தொடர்ந்து வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அதிகாரிகள் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *