ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் – கொழும்பு இடையே புதிய நேரடி விமான சேவை

ரஷ்யாவின் சைபீரிய நகரமான நோவோசிபிர்ஸ்க்கிலிருந்து கொழும்புக்கு புதிய சர்வதேச விமான சேவையை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி முதல் எஸ்7 எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

வாரத்திற்கு இருமுறை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கொழும்புக்கு எளிதாகப் பயணிக்க வாய்ப்பு ஏற்படும்.

இதேவேளை, ஹிக்கடுவை,பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாகப் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவைக்கான பயணச்சீட்டுகள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *