நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் – புதிய ஏரி உருவானதால் எச்சரிக்கை

நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் உருவாகி நேபாளம் வழியாகப் பாயும் இந்த ஆறுகள் பின்னர் போடேகோஷி நதியுடன் இணைகின்றன. புதிய ஏரியில் நேற்று காலை வரை சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.

இதையடுத்து, நேபாளத்தின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *