அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு (CIA) தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) இரகசியமாக மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தப் பயணத்தை “சாதாரணமானது” என்று வர்ணித்தாலும், யுக்ரைன் போரில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சிஐஏ தலைவர் திடீரென மொஸ்கோவிற்குச் சென்றது அரசியல் தரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
யுக்ரைன் போரில் நிலவிவரும் தேக்கநிலை குறித்தும், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு எதிராக ரஷ்யா எந்தவிதமான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிப்பதற்காகவே ராட்கிளிஃப் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போல்டிக் நாடுகள் மீது ரஷ்யா குறைந்த அளவிலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மதிப்பீடுகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
Leave a Reply