ரஷ்ய ஜனாதிபதி – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், நேற்று இரவு மாஸ்கோ சென்றடைந்தார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று ரஷ்ய ஜனாதிபதி புட்டினும், ஜெய்சங்கரும் சந்தித்து இந்தியா-ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *