ஹார்மோஸ் நீரிணை இனி அமெரிக்காவின் பகுதி – வரைபடத்தை வெளியிட்ட ட்ரம்ப்

ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பின்னர், உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் பின்னர், தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

அதன் பின்னர், அமெரிக்காவும் தனது கப்பல்கள் மூலம் ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு அதனை கட்டுப்படுத்த நினைத்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

நீரிணையை திறக்க அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், எண்ணெய் மீதான தடைகளை அகற்ற வேண்டும், மேலும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நீர்வழித்தடத்தில் கடற்கரைகளைக் கொண்டுள்ள ஈரான் மற்றும் ஓமன், கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் விதிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *