மேற்கு நேபாளத்தில் நிலநடுக்கம்

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் அதிகாலை வேளையில் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வு மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *