ஈரானில் கடந்த ஆண்டில் 1,600 பேருக்குத் தூக்கு

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகச் சொல்லி இரண்டு ஆடவர்களை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. அவர்கள் ஒமீத் பெஹ்சாத் (Omid Behzad); பௌரியா சஃப்வத் (Pouria Safvat) ஆவர்.

ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் எங்கு இருக்கின்றன என்ற தகவல்களை அவர்கள் மொஸாட் (Mossad) உளவுச்சேவை அதிகாரிகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்பட்டது. அமெரிக்கா – ஈரான் போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து ஈரானில் தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் குறைந்தது 1,639 பேருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.

சீனாவுக்கு அடுத்து அதிகமானோரைத் தூக்கிலிடும் நாடு ஈரான் என்று Amnesty International மனித உரிமை அமைப்பு சொல்கிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *