கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, எக்ஸான் மொபில் நிறுவனத்தால் கப்பல் மூலம் ஜப்பானுக்குச் செல்கிறது.

750,000 பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ‘ஃப்ரீடம் குளோரி’ என்ற கப்பல், டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி  கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வான்கூவரிலிருந்து புறப்பட்டுள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ஈனியோஸ் TMX கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதனிடையே, எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஜப்பான் அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தங்களது வளர்ச்சி முன்னறிவிப்பை 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கும் வரை, ஜப்பான் தனது எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஹார்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வந்தது.

போரினால் ஹார்முஸ் வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து,

டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழியானது, கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் உள்ள ஒரு கடல் முனையத்திற்கு, ஒரு நாளைக்கு 890,000 பீப்பாய்கள் வரையிலான கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது.

TMX என அறியப்படும் இந்தக் குழாய்வழி ஃபெடரல் நிர்வாகத்திற்குச் சொந்தமானது, மேலும் இது 2025-ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டிலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீத கொள்ளளவில் இயங்கி வருகிறது.

தற்போது ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகள் தங்களது விநியோகஸ்தர்களை அவசரமாகப் பன்முகப்படுத்த முயற்சித்து வருகின்றன.

ஆசியா நாடுகளுக்கான ஏற்றுமதி 2024-இல் சுமார் 51 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வான்கூவரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் TMX வழியாக ஆசியாவிற்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஈரான் போர் தொடங்கியதன் பிறகு, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அனைத்தும் TMX  குழாய்வழி மூலம் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளன.

அதேவேளையில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கனடிய எண்ணெய் கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் புதிய வரிகளை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எண்ணெயை ஒரு பேராயுதமாகப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *