மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கோட்டா வருகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (ஜூலை 23, 2026) கொழும்பில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தன்னை எக்காரணம் கொண்டும் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த ரிட் (Writ) மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று மேலதிக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இதற்கு முன்னர் ஜூலை 9ஆம் திகதி தொடர்ச்சியாக 4ஆவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *