போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் – கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேச்சாளர் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சி.ஜே.பி சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைப் பிரயோகித்த நேரத்தில், கட்சியின் பேச்சாளர் அருகிலுள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டபடி, விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இதுகுறித்து பதிலளித்த அவர், ‘தொடர் போராட்டங்கள் காரணமாக இரண்டு நாட்களாகத் தூங்கவில்லை; கடுமையான பசியின் காரணமாகவே பர்கர் சாப்பிட்டேன். போராட்டக்காரராக இருப்பது மட்டுமே என் வேலையா?’ என்று கேள்வி எழுப்பினார்.

கட்சி உறுப்பினர்களும் போராட்டக்காரர்களும் காவல்துறையின் தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், பேச்சாளரின் இந்தச் செயல் மிகவும் பொறுப்பற்றது மற்றும் உணர்ச்சியற்றது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அவரை பேச்சாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்து உத்தியோகபூர்வ பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கி சி.ஜே.பி  அறிவிப்பை வெளியிட்டுள்ளது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *