தொழிற்கட்சித் தலைவராக இருந்த சர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்று நாட்டின் புதிய பிரதமரானார்.
எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார்.
மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபுவாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘ மன்னரின் கையை முத்தமிடும்’ (Kissed hands) மரபுச் சடங்கை நிறைவு செய்தார்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரண்மனை அறிக்கையில் பர்ன்ஹாம் மன்னரின் ‘கைகளை முத்தமிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையில் கைகுலுக்கிக் கொண்டதாகவே கருதப்படுகிறது.
Leave a Reply