தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

இலங்கை: தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *