ஜோர்தானில் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் ‘குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்’ இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆலோசனையை தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜோர்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *