ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா

ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் காணாமல் போனதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதி செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், இந்த தொடர் எதிர் தாக்குதல்கள் நேற்று இரவு (18) தொடங்கப்பட்டன.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும், அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களுக்காக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு (IRGC)  உடனடித் தண்டனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மோதலைத் தீவிரப்படுத்த முயற்சிப்பதற்கு வொஷிங்டன் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து, இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *