இரண்டு தேசிய விருதுகள் : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷிற்கு இயக்குநராகக் கிடைக்கும் முதல் தேசிய விருது ஆகும்.
அதே நேரத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை வெற்றி குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,’ராயன்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான (சிறப்புக் குறிப்பு) விருதையும் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மதிப்புக்குரிய தேசிய விருதுகள் நடுவர் குழுவிற்கும், தேர்வு முகமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது திரையுலகப் பயணம் முழுவதும் மாறாத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு நன்றி என தெரிவித்தார்.
அத்துடன் நடிகராக இது எனது 3-வது தேசிய விருது, இயக்குநராக எனது 1-வது தேசிய விருது. எனது பலத்தின் தூண்களாக விளங்கும் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.
இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. ‘எண்ணம் போல் வாழ்க்கை.. ஹர ஹர மகாதேவ், ஓம் நமசிவாய’ எனத் தனது வழக்கமான பாணியில் தனுஷ் இந்த நெகிழ்ச்சியான அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *