பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்

பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க உள்ளார்.

பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் வரவிருக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி பதவியேற்கவுள்ளார்.
பிரெக்ஸிட் (Brexit) வாக்கெடுப்புக்கு பிந்தைய கடந்த பத்தாண்டுகளில், பிரிட்டனின் ஏழாவது பிரதமராக இவர் பொறுப்பேற்கிறார்.

இதற்கு முன்னர் இவர் மான்செஸ்டர் நகரத்தின் மேயராகவும், தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *