அமெரிக்காவையே அதிர வைத்த டீப் செக் செயற்கை நுண்ணறிவு

சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது,

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சீனாவின் டீப்சீக் (Deepseek) என இரண்டுமே நாம் அனுப்பும் தரவுகளை மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாரணமாக கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளை இலகுவாக மேற்கொள்ள எமக்கு உதவுகின்றது.

சட்ஜிபிடியை போலவே டீப்சீக் AI மொடலையும் நாம் செயலியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், நேரடியாக வெப்சைட்டிலும் பயன்படுத்தலாம்.

தற்போது உலகளவில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்படும் AI மொடலாக இந்த டீப் சீக் உள்ளது. அது மட்டுமல்லாது டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாகவும் மாறியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை இது ஆட்டம் காண வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீப்சீக் செயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட் ஜிபிடி மற்றும் டீப்சீக் என இரண்டுமே இலவசமாகக் கிடைத்தாலும் சட்ஜிபிடியில் நாம் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

புதிய வெர்ஷன்களை பயன்டுத்த அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் டீப்சீக்கில் தற்போது அனைத்துமே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *