தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார்.
சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை.
இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப்.
இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கொலம்பிய அரசு அதிகாரிகள் அமெரிக்கா வர தடை விதித்தார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி, கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார்.
‘நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம்’ என, தெரிவித்தார். இதனால் ஆடிப்போனது அமெரிக்கா. ஆனால் கொலம்பிய அரசு தன் நிலையை திடீரென மாற்றிக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்படும் கொலம்பியர்களை ஏற்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Leave a Reply