பாடசாலைகளுக்கு இடையிலான “band” இசை போட்டி மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான band இசை போட்டியானது இரணுவத்தின் 54 காலாட்படையின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம் பெற்றது
குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தகைமையின் அடிப்படையிலும் பிரிவுகளிலும் போட்டிகள் இடம் பெற்றதோடு
போட்டிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி band அணியினர் மாவட்ட ரீதியாக முதலிடத்தை பெற்று கொண்டனர் அதே நேரம் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் மன்/வெள்ளாங்குளம் பாடசாலை மூன்றாம் இடத்யையும் பெற்று கொண்டது
போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று கொண்ட அணியினருக்கு இராணுவத்தினரால் வெற்றி கிண்ணங்களும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply