மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நோக்கங்களுடன் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என்று ஆக்கம் பெற்றது. கனடாவின் இளையோரால் இவ்வமைப்பு நடாத்தப்பட்டு வந்தது.அந்த இளையோரின் சொந்த உழைப்பின் பணத்தில் வாடகை செலுத்தப்பட்டு வந்ததை நான் அறிவேன். சிறிய தொகை மட்டுமே உலகத் தமிழர் இயக்கத்தால் கொடுக்கப்பட்டது.பின்பு தமிழ் ஈழத்தில் இருந்து வழி நடத்திய செயற்பாட்டாளர்கள் மூலம் இன்றைய செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் CTC ,சம்பளம் பெற்று வேலை செய்பவர்களைக் கொண்டு இயங்கத் தொடங்கியது. இந்த அமைப்பானது தமிழ் மக்களிடமும், கனடிய அரசாங்கத்திடமும் இருந்து பெருந்தொகைப் பணங்களை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டு செயலாற்றுகின்றது ,கனடா தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகட்கோ அல்லது தமிழர் பொருளாதாரத்தை வளர தெடுக்கும் நோக்கத்தையோ பிரதான கொள்கையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஒரு வியாபார நிறுவனமாக மாறிவிட்டது. உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்ட 140,000 தமிழர்களின் நினைவாக கனடாவில் ஒரு நினைவு மண்டபத்தையாவது அமைக்க இதுவரை ஊக்கம் கொள்ளவில்லை என்பதை மேலே உள்ள வாட்ஸ்ப் செய்தி உறுதி செய்கின்றது. இந்த நிறுவனம் தமிழ்த் தேசியத்தை பல்கலாச்சார நாடான கனடாவில் வடிவம் கொடுக்காமல் செயற்படுவது ஏன் ? இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் எங்கே? கனடா அரசால் வழங்கப்படும் நிதி எந்த மக்களுக்கு? எங்கே செலவழிக்கப்படுகின்றது? பதிலை எதிர்பார்க்கின்றேன். இப்படிக்கு ஏகலைவன் 30/08/2023
Leave a Reply