இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா 72 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவின்போது, விக்கட் இழப்பின்றி 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்தநிலையில் இன்று போட்டியின் இரண்டாம் நாள் இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 மணிக்கு ஆட்டம் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Leave a Reply