இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது தற்போது அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
இலங்கையில் பொருளாதார முதலீடுகளை செய்துள்ள இந்தியா மற்றும் சீனாவிற்கான எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமைய போகும் என்பதை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது.
இந்த தேர்தலில், ரணில், சஜித் மற்றும் அனுர தரப்புக்கள் மும்முரமான போட்டியினை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் இங்கு இந்தியாவின் உற்றுநோக்கலானது ரணிலை எதிர்பார்க்கும் ஒரு எதிர்கால அரசியல் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறான அரசியல் நகர்வுகளையும் இந்தியாவின் நோட்டமிடல்கள் தொடர்பிலும் விசேட கருத்துக்களை புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் விளக்கியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்த ஒரு முக்கிய செய்தியை இந்தியா பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் என்பது சரிவு நிலையை கண்டுள்ளதோடு, எதிர்கால இலக்குகளை மையப்படுத்தும் தேர்தல் தொடர்பிலும், அதற்காக அண்டை நாடுகள் மேற்கொள்ளும் நகர்த்தல்கள் தொடர்பிலும்
ஆராயப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply