சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.
சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சீதுவை திசையிலிருந்து வந்த காரை சோதனையிட முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அப்போது, காரின் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமை துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது, துப்பாக்கி வெடித்ததில் அந்த அதிகாரியின் காலிலும், பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டன.
பின்னர் இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காரில் பயணித்த பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply