அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ள ஜோபைடன், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிசினை அறிவித்துள்ளார்.
இந்த வருடம் எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு நான் எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கவிரும்புகின்றேன் என பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக கட்சியினரே ஒன்றிணைந்து டிரம்பினை தோற்கடிக்கவேண்டிய நேரம் இது இதனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply