பலா பழத்தால் வந்த விபரீதம் அடித்து கொல்லப்பட்ட வயோதிப பெண்! இளைஞன் கைது

குருநாகல் மெல்சிறிபுர பகுதியில் 79 வயதுடைய பெண்ணின் தலையில் பலா பழத்தால் தாக்கி கொலை செய்த 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெல்சிறிபுர வடவன கிராமத்தில் வசித்து வந்த 79 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருகிறது

கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பலா பழமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது