மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply