சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் (SEM), புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை வலிமையாக்குதல் ஆகியவை இந்த புதிய புகலிட யுக்தியில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 1ஆம் திகதி, திருத்தப்பட்ட புகலிடச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, புகலிட அமைப்பின் மறுசீரமைப்பு அடிப்படையில் வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, புகலிட உத்தியை மதிப்பாய்வு செய்யவும், தேவைப்பட்டால் சரிசெய்யவும் வேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply