தங்காலை பள்ளிக்குடா பகுதியிலில் கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை உடனடியாகக் கரைக்குக் கொண்டு வருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் கடலில் மிதந்த போத்தல்களைக் எடுத்து அவற்றை மதுபானம் என நினைத்துக் குடித்துள்ளனர்.
இதனால் கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாரிய சுகவீனமடைந்துள்ளதுடன் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஈழமுரசு செய்திகளுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Leave a Reply