இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவதால், இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக சந்தை தரப்பினர் கூறுகின்றனர்.

அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காணிகளின் உரிமை
இதன்போது, காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின் உரிமையைப் பெறுவார்கள் என்பதால், காணிகளின் தேவை குறைவதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்

நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், முந்தைய வரவு செலவு திட்ட ஆவணத்தில் ஸ்டேஷன் பிளாசா என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படை
அத்துடன், மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் மதிப்பின் கீழ் அவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே எந்தவொரு இடைத்தரகர் அல்லது அரசியல் உறவும் இல்லாமல் பயனுள்ள திட்டங்களுக்காக காணி வைத்திருக்கும் அமைச்சகங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒருவர் குத்தகை அடிப்படையில் அரச நிலத்தைப் பெற முடியும்.

இந்த நிலைமையின் அடிப்படையில், தனியார் காணி வியாபாரம் தொடர்பில் தற்போது விளம்பரங்கள் வெளியிடப்படுகின்ற போதிலும், விலை கேட்காமல் காணிகளை கொள்வனவு செய்ய மக்கள் முன்வருவதில்லை என சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *