முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (22.04.2024) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply